2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிரான்புல்கட்டுப் பிரதேசத்தில் மணல் அகழ்வு அனுமதியை தடை செய்வதென தீர்மானம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கிரான்புல்கட்டுப் பிரதேசத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதியை தடை செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் மணல்  அகழ்வில் ஈடுபடுபவர்களுடனான முக்கிய கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை  நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் அகழ்கின்றபோது, அதனால் ஏற்படுகின்ற  பிரச்சினைகள் மற்றும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு விரிவாக ஆராயப்பட்டன.

மேலும், இந்தக் கலந்துரையாடலின் இறுதியில் பல தீர்மானங்களும்; நிறைவேற்றப்பட்டன.

இதில் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கிரான்புல்கட்டுப் பிரதேசத்தில் மணல் அகழ்வதற்கான அனுமதி தடைசெய்வது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, மணல்; அகழ்வாளர்களால் வருடாந்தம் இரு போகங்களின்போதும் அறுவடைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மணல் ஏற்றிச்செல்கின்ற பிரதான பாதைகள் புனரமைத்து கொடுக்கப்படும். இதனை புவிச்சரிதவியல் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர் எம்.பாரிஸ் முன்னின்று செய்து தருவதாக உறுதியளித்தார்.

எதிர்காலத்தில்  இந்தப் பாதைகள் அனைத்தையும் அரசாங்க நிதியைக் கொண்டு முழுமையாக நிரந்தரமாக சீர்செய்து செப்பனிடுவது.
இவைகள் அனைத்தும் உடன் அமுலுக்குவரும் வகையில் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர்பற்று உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ந.முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பி.அரியநேந்திரன், சி.யோகேஸ்வரன் மற்றும்  புவிச்சரிதவியல் சுரங்கப் பணியகத்தின் பொறியியலாளர் எம்.பாரிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .