2025 மே 05, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் குரங்குகள் அட்டகாசம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் தொடர்ந்தும் அதிகரத்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அலைந்து திரியும் நூற்றுக்கணக்கான குரங்குகள் வீடுகள் மற்றும் பாடசாலைகளின் கூரைகளின் மீதேறி வீட்டுக்கூரைகளை சேதப்படுத்துவதுடன்; பயன்தரும் மரங்களில் பழங்களையும் அழித்து வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலை விஷ்னு மஹா வித்தியாலத்தில் பல கட்டிடங்களை இக்குரங்குகள் சேதப்படுத்தியுள்ளதுடன் வகுப்புறைகளுக்குள் நுழைந்து தளபாடங்களையும் அழித்துள்ளதாக பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய குரங்குகளின் அட்டகாசம் தொடர்பில் பலமுறை ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதுடன் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பயனில்லையென மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இக்குரங்குகளினால் ஏற்படும் அழிவிலிருந்து தம்மை பாதுகாப்புமாறு மக்கள் மேலும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X