2025 மே 05, திங்கட்கிழமை

கல்குடா கல்வி வலயத்தில் தூய பசும்பால் விநியோகத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை கால்நடை வைத்திய காரியாலயம் ஏற்பாடு செய்துள்ள தூய பசும்பால் விநியோகத்திட்டம் கல்குடா கல்வி வலயத்தில் உள்ள விநாயகபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தூய பசும்பாலை முன்னிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ், இத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

வித்தியாலய அதிபர் திருமதி கே.துரைராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்குடா கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஷ்ணராஜா, வாழைச்சேனை கால்நடை வைத்திய காரியாலய வைத்திய அதிகாரி திருமதி டி.ரீ.ரீ.வின்சன், கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஈ.கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தப் பாடசாலைக்கு வாழைச்சேனை கால்நடை வைத்திய காரியாலயத்தினால் பாலை சூடாக்கும் இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X