2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பனிச்சங்கேணி ஆற்றில் சட்டவிரோத மீன்பிடி அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பனிச்சங்கேணி ஆற்றில் சட்டவிரோத மீன்பிடி அதிகரித்து வருவதாக மாவட்ட கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்ட முகாமையாளர் ஏ.கோகுலதீபன் தெரிவித்தார்.

ஆற்றின் நடுவே தடைகளை ஏற்படுத்தி தடைசெய்யப்பட்ட வலைகளைப் பாவித்து மீன்பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றுன. இதனால் ஆற்றிலுள்ள மீனினங்கள் அழிந்து வருவதுடன், சுற்றாடலுக்கும் பாரிய தீங்கு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

குறித்த சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை கண்டறிவதற்காக மாவட்ட  அரசாங்க அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் நேற்று  புதன்கிழமை அப்பகுதிக்கு படகுகளில் சென்று பார்வையிட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின்  உதவிப் பணிப்பாளர் டொமின்கோ ஜோர்ஜ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், பிரதேச செயலாளர்கள், சுற்றாடல் அதிகார சபை மாவட்ட அதிகாரி கே.கோகுலன் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பான அறிக்கையை மாவட்ட சுற்றாடல் மாதாந்த அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளதாக கள ஆய்வில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .