2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

இந்து சமயத்தினை மேலோங்கச் செய்ய விசேட குழுக்கள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து சமயத்தினை மேலோங்கச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாக விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான ஒன்றுகூடலின்போதே இக்ழுக்கள் அமைக்கப்பட்டன.

இதன்போது பிரச்சாரக்குழு, ஒருங்கிணைப்புக்குழு, வெளியீட்டுக்குழு, செயற்பாட்டுக்குழு, போன்ற நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டம் தழுவிய ரீதியில் தமது செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மேற்கொள்ளவுள்ளது.

இந்துக்கள் சிவசின்னம் அணிதல், குறைந்தது வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமாவது அனைத்து ஆண்களும் வேட்டி அணிந்தும் பெண்கள் இந்து கலாசார உடைகளை அணிந்தும் கடமைகளுக்குச் செல்வது, ஆலய நிர்வாக கட்டமைப்புக்களை முறையாக ஒழுங்கு படுத்துதல், அறநெறி வகுப்புக்களை முறையாக செயற்பட வைத்தல், பஞ்ச புராணங்களை
இளைய தலைமுறையினருக்கு எடுத்தியம்புதல் போன்ற இன்னோரன்ன செயற்பாடுகளில் இக்குழுக்கள்
ஈடுபடவுள்ளன.

இந்நிகழ்வில் வலயக் பல்விப் பணிப்பாளர் சுபா சக்கரவத்தி, கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தலைவர் வி.கமலதாஸ் ஆகியோர் உட்பட பல
மாவட்ட இந்து அமைப்புக்களின் பிரதிகளும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X