2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரி.எல்.ஜவ்பர்கான்


2013ஆம் ஆண்டுக்கான 'தெயட்ட கிருள' அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மட்டக்களப்பு, காத்தான்குடி பிராந்திய காரியாலயத்தில் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போது கடந்த காலத்தில் காத்தான்குடிப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட 'தெயட்ட கிருள' அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

மேலும், எதிர்காலத்தில்  இந்தப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு இவை தொடர்பான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் பதில் தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெசீம், காத்தான்குடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் அதிகாரி எஸ்.கருணாகரன் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X