2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

'பட்டதாரி பயிலுனர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனம்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

'பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் விரைவில் வழங்கப்படவுள்ளது. நியமனக் கடிதங்களை தமிழில் தயாரிப்பதிலேயே காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது' என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

'தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு அவர்களது நியமனக் கடிதங்களை தமிழில் வழங்க வேண்டும் என்பது நியதி. அதனால், அவர்களது நியமனக் கடிதங்களை தமிழில் தயாரிக்க வேண்டிய கடப்பாடு அமைச்சுக்கு உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கப் பிரதிநிதிகள் தமது நிரந்தர நியமனம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.சாள்ஸை அவரது வாசஸ்தலத்தில் கடந்த சனிக்கிழமை (5) சந்தித்து கலந்துரையாடியபோதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'அமைச்சில் போதிய தமிழ்மொழிமூல அதிகாரிகள் இல்லாததினால் நியமனக் கடிதங்களை தமிழில் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால் அமைச்சின் வேண்டுகோலுக்கமைய மட்டக்களப்பு கச்சேரியில் இருந்து நான்கு தமிழ் அதிகாரிகளை மடிக்கணினிகளுடன் அமைச்சுக்கு அனுப்பி வைக்கின்றேன்.

அங்கு நியமனக் கடிதங்களை தமிழில் தயாரிப்பதற்கு துரிதமாக வேவைகள் இடம்பெறுகின்றன. நியமனக் கடிதங்கள் தயாரிக்கப்பட்டதும் விரைவில் மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்'  என அவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பில், மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத் தலைவர் வை.பிரதீபன், பொருளார் எம்.கமலநாதன், உப செயலாளர் எல்.தீபாகரன் மற்றும் மாவட்டத்தின் பதிநான்கு பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றும் பட்டதாரி பயிலுனர்கள் சார்பாக தலா இரண்டு பேர் வீதம் கலந்துகொண்டனர்.

இவர்கள், நிரந்தர நியமனம் தொடர்பில் தாம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி எடுத்துக் கூறியதுடன் தங்களத நிலைமையினைக் கருத்தில் கொண்டு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோல் விடுத்தள்ளனர். இதேவேளை, தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் இதன்போது அவர்கள் அரச அதிபரிடம் கையளித்துள்ளனர்.

நிரந்தர நியமனம் கோரல் என்ற தலைப்பிலான இவ் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'மட்டக்களப:பு மாவட்டத்தில் சுமார் 2500 பேர் பட்டதாரி பயிலுனர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். ஆறு மாதத்தில் நிரந்தர நியமணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் ஒரு வருடம் எனக் கூறப்பட்டது. தற்போது ஒரு வருடமும் மூன்று மாதத்தையும் தாண்டியுள்ள நிலையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்காக கூறி பட்டதாரி பயிலுனர்கள் பலர் அமைச்சு, திணைக்களங்களில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

ஆனால் சிலர் இதுவரை அமைச்சுக்களுக்குள்ளோ திணைக்களங்களுக்குள்ளோ உள்வாங்கப்படாமல் உள்ளனர்.
இவர்கள் குறித்துக் கவனம் செலுத்த வேண்டும். அதேவேளை எமது நிரந்தர நியமனத்தினை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு போதாமை காரணமாக பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளை நாங்கள் எதிர்நோக்கி வருகின்றோம். குறிப்பாக வெளிக்கள உத்தியோகஸ்தர்கள், திருமணம் செய்தவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இத்துடன் நிரந்தர நியமனம் வழங்கப்படாமையினால் சமூகத்தில் நிரந்தர ஊழியர்களுக்கு மத்தியில் அவமானங்களுக்கும் கிண்டல்களுக்கும் கேலிக்கும் மத்தியில் சேவையாற்ற வேண்டியுள்ளது.

இதனால் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்' என குறித்த மகஜரில் கோரப்பட்டுள்ளது.

இச்சந்திப்புக் குறித்து அரச அதிபரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X