2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள இந்து மயான காணிகளை காத்தான்குடியை சேர்ந்த சிலர் அத்துமீறி பிடித்துள்ளதாகவும் அதை மீட்டுத்தருமாறு கோரியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையிலேயே இந்த ஆட்டப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆரையம்பதி பிரதேச மக்கள் மாவட்ட செயலகத்தின் பிரதான கதவுகளை மூடினர்.

அத்துடன்  மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த பிரதியைமச்சர்கள், நாடளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளே; செல்ல முடியாதவாறு வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடிருந்தோர் தமது  பொது மயான காணியை அத்துமீறி காத்தான்குடியை சேர்ந்த சிலரினால் பிடிக்கப்படுவதாகவும் இதனால் தமக்கு சடலங்களை அடக்கம் செய்ய இடமில்லாது இருப்பதாகவும் கோசங்களை எழுப்பியதுடன் சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.

இதையடுத்து அங்கு வருகை தந்த பொலிஸார் மூடப்படடிருந்த மாவட்ட செயலக கதவுகளை உடைத்து அரசியல் பிரமுகர்களையும் அதிகாரிகளையும் அழைத்துச் சென்றனர்

இது விடயமாக கவனமெடுப்பதாக அங்கு வந்த அரசியல்வாதிகள் உறுதியளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மாவட்ட செயலகத்திற்கு வெளியில் சென்றனர்.






You May Also Like

  Comments - 0

  • Ash Monday, 07 October 2013 06:29 AM

    அரசாங்கம் சனத்தொகை வீதத்திற்கேற்ப காணி பங்கீட்டினை மேற்கொள்ள வேண்டும்...

    Reply : 0       0

    MANITHAN Monday, 07 October 2013 06:58 AM

    "மூடப்பட்டிருந்த மாவட்ட செயலக கதவுகளை உடைத்து" என்பது முற்றிலும் பிழை... கதவுகளை திறந்து என்பதுதான் சரி...

    Reply : 0       0

    AJ Monday, 07 October 2013 07:51 AM

    எங்கு போனாலும் இடம் பிடிப்பதும் பிற இன மக்களின் காணிகளை பறிப்பதுமே வேலையாய் போய்விட்டது. இதற்க்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முஸ்லிம் அடக்கம் செய்யப்படும் இடத்தை தமிழர்கள் பிடித்தால் எப்படி இருக்கும்? அல்லது காத்தான்குடி பகுதியில் யாரும் காணி தான் விலைக்கு சரி வாங்க முடியுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X