2025 மே 06, செவ்வாய்க்கிழமை

காணாமல் போனோரின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் காணமல் போனோர் தொடர்பான விபரங்களை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு சமர்ப்பிக்குமாறு இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறைவேற்றப் பணிப்பாளர் கலாநிதி லயனல் ஏ.செல்வேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் காணமால் போனவர்களை கண்டறிவதற்காக அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழு, காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களை கோரியுள்ளது. தனியாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ காணாமல் போனோரின் விபரங்களை எதிர்வரும் 30ஆம் திகதிக்கிடையில் ஒப்படைக்குமாறு அந்த ஆணைக்குழு கோரியுள்ளது.

இதற்கமைவாக எமது இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோரின் விபரங்களை சேகரித்து அந்த ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனோரின் முழுப்பெயர் மற்றும் முகவரி உட்பட காணாமல் போனோரின் புகைப்படம் என்பவற்றுடன் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்பதாக இல 27, தெற்கு எல்லைவீதி, மட்டக்களப்பு எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அல்லது நேரடியாக ஒப்படைக்குமாறு இலங்கை தாயக மக்கள் மறுமலர்ச்சி கழகத்தின் நிறைவேற்றப் பணிப்பாளர் கலாநிதி லயனல் ஏ.செல்வேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X