2025 மே 06, செவ்வாய்க்கிழமை

கொலை குற்றச்சாட்டில் ஒன்பது வருடங்களுக்கு பின்னர் கைதானவருக்கு விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் குடும்பஸ்தர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில் கைதான நபர் ஒருவருக்கு இரண்டு வாரகால விளக்க மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உறுகாமம் கித்துள் பகுதியைச் சேர்ந்த வெள்ளக்கண்ணன் என்பவருக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நபரை செவ்வாய்க்கிழமை (8) கைதுசெய்த கரடியனாறு பொலிஸார் புதன்கிழமை (9) அவரை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்தனர்.

இதன்போதே நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் சந்தேக நபரை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவின் தும்பாலஞ்சோலைக் காட்டிலுள்ள மயானத்திலிருந்து செவ்வாய்க்கிழமை   பிற்பகல் 4 மணியளவில் தும்பாலஞ்சோலையைச் சேர்ந்த காத்தான் என்றழைக்கப்படும் கந்தசாமி சந்திரசிறி என்பவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னர் மரண விசாரணைகள் எதுமின்றிப் புதைக்கப்பட்டதாக குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பொலிஸாரும் கொல்லப்பட்டவரின் உறவினர்களும் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இக்கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்திலேயே மேற்படி வெள்ளக்கண்ணன் என்பவர் கடந்த செவ்வாயன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X