2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் இளைஞர் கழகங்களுக்கு உபகரணங்கள் கையழிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பினால் இளைஞர் கழகங்களுக்கான உபகரணங்கள் கையழிப்பும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் நிகழ்வு நேற்று ஏறாவூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.ஹனிபா இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ரமீஸ், முன்னாள் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் தாஸிம், இளைஞர் சம்மேளனத்தின் தலைவர் ரிஸ்வி, ஆகியோர் உட்பட இளைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஏறாவூர் இளைஞர் கழகத்தினருக்கு விளையாட்டு உபகரணங்கள் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் வழங்கப் பட்டதோடு இளைஞர் கழகத்தினரால் ஏறாவூர் இளைஞர் சேவைகள் உத்தியோகத் தர்களினதும் பிரதேச செயலாளர், அவர்களினதும் சேவைகளைப் பாராட்டி ஞாபகார்த்தச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத் தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .