2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நாளை வைத்திய முகாம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 08 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தாண்டியடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நாளை சனிக்கிழமை வைத்திய சேவை முகாம் நடைபெறவுள்ளதாக மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் பணிப்பாளர் லயன் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் மொறட்டுவ இரத்மலான லயன்ஸ் கழகத்துடன் இணைந்து இந்த நடமாடும் வைத்திய சேவை முகாமை நடத்துகின்றது.

இந்த நடமாடும் வைத்திய சேவை முகாமில் 100 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு விநியோகம், பார்வைக் குறைபாடுடைய 150 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்குதல், 150 நோயாளிகளுக்கு பொது மருத்துவ வசதிகளை மேற்கொள்ளுதல் ஆகிய சேவைகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், இதன்போது 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

இதில் மொறட்டுவ இரத்மலான லயன்ஸ் கழக மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகப் பிரதிநிதிகள், வைத்தியர்கள், முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளதாக மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் பணிப்பாளர் லயன் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .