2025 மே 02, வெள்ளிக்கிழமை

'பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன'

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது என   பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சா தெரிவித்தார்.

காத்தான்குடி அந்நாசர் வித்தியாலய மண்டபத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழித்தல் மற்றும் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகத்தை தடுத்தல் எனும் தலைப்பிலான செயலமர்வில் கலந்துகொண்டு  உரையாற்றும்  போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் அனுசரணையுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான நிறுவத்தினால் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துசெல்வதுபோல் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன.
இவற்றை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அதிகமாக மேற்கொள்ளப்படல் வேண்டும். வீட்டு வன்முறைகளினால் அதிகமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகள் மற்றும் பெண்களின் தேவைகள் குறித்து ஆராயப்படும் இடங்களில் பெண்களின் பங்கு பற்றுதல் என்பது அவசியமாகும். சமூகத்தில் பெண்கள் தூரப்படுத்தப்பட்ட காலம் மலையேறி விட்டது. பெண்களின் பிரச்சினைகளை பேசுகின்ற பெண்களின் தேவைகள் குறித்தும் அவர்களின் நிலைமை குறித்தும் ஆராய்கின்ற தீர்மானம் எடுக்கின்ற இடங்களில் பெண்களின் பங்களிப்பு கட்டாயமாகும்.

இன்று பெண்களுக்கான பிரச்சினைகளும் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. பெண்களின் கல்வி அவர்களின் பாதுகாப்பு, அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் என்பனவும் முக்கியமானதாகும். பெண்களின் வாழ்வதாரத்தையும் கவனத்திற் கொள்ளவேண்டும்' என மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .