2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருத்தியமைக்கப்பட்ட படகு பாதையை சேவையிலீடுபடுத்துமாறு கோரிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல்.ஜவ்பர்கான்


திருத்தியமைக்கப்பட்டு ஒருவாரமாய் சேவையிலீடுபடுத்தாமல் நிறுத்தி வைக்கப்படிருக்கும் மண்முனை, கொக்கொடிச்சோலை வாவியூடான படகு பாதையை மீண்டும் சேவையிலீடுத்துமாறு நீர்வழிப்பயணத்தில் ஈடுபடுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்முனை, கொக்கடிச்சோலைக்கிடையிலான நீர்வழி படகு பாதை பழுதடைந்து ஒருமாதகாலமாகிறது. இதனால் ஒரு படகு பாதையே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே பழுதடைந்த பாதை வீதி  அதபிவிருத்தி திணைக்களத்தினால் மீண்டும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

பாதை திருத்தப்பணிகள் பூர்த்தியடைந்து ஒரு வாரகாலமாகியும் இன்னும் சேவையில் ஈடுபடுத்தாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை பொது மக்கள் கண்டித்துள்ளதுடன் பாதையை உடனடியாக சேவையலீடுபடுத்தும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பாதை மாத்திரம் சேவையீடுபடுத்தப்பட்டுள்ளமையால் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருவதாக பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு பாதையில் சுமார் 150 பயணிகள் முதல் 200 பயணிகள் வரை ஏற்றிச்செல்வதால் மக்கள் கடும் இடநெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன் அதிக எடை காரணமாக பாதை உடைந்து வாவியினுள் விழும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .