2025 மே 01, வியாழக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் கதை எழுதும் போட்டி

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவ அச்சுதன்

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நாடளாவிய ரீதியில் நடத்தும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர்கதை எழுதும் போட்டி – 2013 க்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் தமிழில் சிறுவர் இலக்கியத்தை ஊக்குவிக்கவும் தரமான சிறுவர் இலக்கியப் படைப்புக்களை உருவாக்கவும் நோக்காகக் கொண்டு முன்பள்ளி ஆசிரியர்களுக்காக நாடளாவிய ரீதியில் சிறுவர்கதைப் போட்டி ஒன்றினை நடத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவப்படுத்தி இப்போட்டி ஒழுங்கு பண்ணப்படுவதனால், சகல முன்பள்ளி ஆசிரியர்களையும் இப்போட்டியில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்தப்பாகத்திலும் வசிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
• சிறுவர் கதைகளை மட்டுமே போட்டிக்காக அனுப்பி வைக்கலாம்.
• ஒருவர் எத்தனை சிறுவர் கதைகளையும் போட்டிக்காக அனுப்பி வைக்கலாம்.
• கதைகள் சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் மிக எளிமையாக இருத்தல் வேண்டும்.
• படம் வரைந்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.
• எந்தக் கருப் பொருளிலும் கதைகள் எழுதப்படலாம்.
• கதைகள் எந்த வடிவிலும் எங்கேயும் வெளிவந்திருக்கக் கூடாது.
• உங்களால் சுயமாக எழுதப்பட்ட புத்தாக்கமாக இருக்க வேண்டும்.
• கதையுடன் - பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, கற்பிக்கும் முன்பள்ளி, முன்பள்ளியின் முகவரி, கதையின் பெயர், கையொப்பம் என்பன அடங்கியிருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .