2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சைபீரியன் கொக்கைச் சுட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 25 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்தைமுனைப் பகுதியில் சைபீரியன் கொக்கு ஒன்றை துப்பாக்கியினால் சுட்டதாகக் கூறப்படும் ஒருவர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்திற்குச் சென்று சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சந்தேக நபர் சைபீரியின் கொக்கு ஒன்றை தனது சட்ட ரீதியான துப்பாக்கியினால் சுட்டு அதன் இறைச்சியை கொண்டு செல்ல முற்பட்டபோதே, சந்தேக நபரை  பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .