2025 மே 01, வியாழக்கிழமை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு

Super User   / 2013 நவம்பர் 26 , மு.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 28 குடும்பங்களுக்கு கரடியன்குள பிரதேசத்தில் நிரந்தர வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்பட்டுள்ளன. சமூகத்தினருக்கான மனிதாபிமான உதவித் திட்டத்தின் கீழ் சுவீடன் கூட்டுறவு நிலைய நிறுவனத்தினரால் இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வீடுகள் பயனாளிகளிடம் நேற்று திங்கட்கிழமை கையளிக்கப்பட்டுள்ளன. சுமார் ஆறு இலட்சம் ரூபா செலவில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்த  கிராம மக்களின் பயன்பாட்டுக்காக 17 இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பொதுநோக்கு மண்டபமும் சிறுவர்களின் உடற்கல்வி மற்றும் விளையாட்டு தேவைக்காக சுமார் ஐந்து இலட்ச ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பூங்காவொன்றும் இதன்போது திறந்துவைக்கப்பட்டன.

சுவீடன் கூட்டுறவு நிலையம் நிறுவனத்தின் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் ரீ.மயூரன் தலைமையில் இடம்பெற்ற கிராமிய வீட்டுத் திட்டக் கையளிப்பு நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிலையம் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் சுபாஷி திஸாநாயக்க, திட்ட அலுவலர் இன்கா லில் ஹம்மர் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் மட்டக்களப்பு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொது முகாமையாளர் எம்.நவறஞ்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .