2025 மே 01, வியாழக்கிழமை

பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பதற்றம்

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்
, மாணிக்கப்போடி சசிக்குமார், தேவ அச்சுதன்

பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதேச செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தேரர் ஒருவர் பிரதேச செயலாளரை அச்சுறுத்தி அவரது அறையின் மேசையிலிருந்த கணினி, தொலைபேசி மற்றும் பெக்ஸ் இயந்திரம் உள்ளிட்ட  பொருட்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை  தூக்கி வீசியதையடுத்தே அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மங்களகம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு இன்று காலை சென்றுள்ளார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடி சுவாமி மலை கிராமத்தில் மேற்படி விகாராதிபதியினால் சட்ட விரோதமாக புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது. இதனை பதிவு செய்வதற்கு பிரதேச செயலாளரிடம் இந்த விகாராதிபதி கோரியுள்ளார்.

தமது பிரிவின்கீழ் இருக்கின்ற அந்த காணியின் உறுத்திப் பத்திரம் உட்பட ஏனைய ஆவணங்களை எடுத்துவரும்படி பிரதேச செயலாளர் உரிய பிக்குவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதேச செயலாளரின் இக்கருத்தினை கேட்ட பிக்கு 'நாம் எந்த ஆவணமும் சமர்ப்பிக்க மாட்டோம்' எனக் கூறிவிட்டு பிரதேச செயலாளரை தாக்குவதற்கு முயன்றுள்ளார்.

பின்பு அவரின் அலுவலக மேசையிலிருந்த ஆவணங்களையும் ஏனை உபகரணங்களையும் எடுத்து எறிந்து விட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பிரதேச செயலக நிர்வாகம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பிக்குவின் இந்த அத்துமீறிய சம்பவத்தினைக் கண்டித்து பிரதேச செயலக ஊழியர்கள் தற்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பட்டிப்பளை பிரதேச நிர்வாகம் தெரிவித்தள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .