2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கைதிகளுக்கு சாரணர் சின்னம் சூட்டல்

Super User   / 2013 நவம்பர் 27 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்


மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள கைதிகள் மற்றும் நலன்புரி உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் கைதிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் செயற்பாட்டின் கீழ் கைதிகள் சாரணர் வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வைபவம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் ஏ.கித்சிறி பண்டார, பிரதம ஜெயிலர் எஸ்.மோகனராஜ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.கிறிதரன் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதான நலன்புரி உத்தியோகத்தர் எஸ்.சிறினீ வாசன், மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் இ.பி.ஆனந்தராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த வைபவத்தில் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களுக்கும் 11 கைதிகளுக்கும் சாரணர் சின்னம்; சூட்டப்பட்டதுடன் சாரணர் கழுத்துப் பட்டியும் அணிவிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .