2025 மே 02, வெள்ளிக்கிழமை

தேரர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரசன்னா இந்திரகுமார்

Kanagaraj   / 2013 நவம்பர் 30 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

அரச உடமைகளுக்கு சேதத்தினை ஒரு சாதாரண மனிதன் ஏற்படுத்தியிருந்தால் பொலிஸாரின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்திருக்குமோ அதே நடவடிக்கைகளை அரச சொத்துக்களுக்கு சேதத்தினை ஏற்படுத்திய தேரர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கையை நாங்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

பட்டிப்பளை பிரதேச செயலாளரை அச்சுறுத்தி உடமைகளை சேதப்படுத்திய பௌத்த தேரரின் செயற்பாட்டினை கண்டித்து மேற்படி மாகாணசபை உறுப்பினர் வெளியிட்டுள் ஊடக அறிக்கையிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.

மதகுருவாக இருந்து புத்தபெருமானின்  போதனைகளை வெளிப்படுத்தி அவ்வழியைப் பின்பற்றுகின்ற மதகுரு ஒருவர் இவ்வாறு ஒரு பெண் அரச அதிகாரியை தாக்க முனைவது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது அவ்வலுவலகத்தில் அவர் போன்று அவ்வூழியர்கள் செயற்பட்டிருந்தால் அவரின் நிலைமை எவ்வாறு இருந்திருக்கும் என்பதனை அவர் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் மதகுருவுக்குரிய மரியாதை அப் பிரதேச செயலக ஊழியர்களால் வழங்கப் பட்டுள்ளது. இருந்தும் அவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிடுவது வேதனைகுரியது.

மாவீரர் தினம் கொண்டாடப் படுவதற்கான ஆயத்தங்கள் காணப்பட்டால் அவர் பொலிஸாரிடம் தகவல் வழங்கியிருக்க வேண்டும் அதற்கு கலாட்ட பண்ண வேண்டிய அவசியமில்லை அவ்வாறு செய்வதற்கு அவருக்கு அதிகாரமுமில்லை அவர் பிழையினை செய்து விட்டு அதனைமூடி மறைப்பதற்கு பொய்பிரசாரம் செய்கின்றார். ஒருமதகுருவாக இருந்து பகிரங்கமாக பொய் சொல்லுகின்ற சந்தர்ப்பத்தினை நாங்கள் முதன் முதலாக அறிய வேண்டியுள்ளது.

இந்த நாட்டிலே  பௌத்த துறவியைப் பெரிதும் மதிப்பவர் நாங்கள் இவ்வாறானவர்களின் நடவடிக்கைகளால் அவ்வாறான நிலை தொடருமா? என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது ஏனைய மதகுருவினருக்கு ஈனப்பெயர் எடுதுக் கொடுப்பவராக இந்த மதகுரு காணப்படுகின்றார்.

வேறு இனம் செறிந்து வாழும் பிரதேசத்திலே ஏனைய இனங்களோடும் சாந்தி சமாதானத்தோடு வாழ்வதற்குரிய சூழலை உருவாக்க வேண்டியவர்கள் அதனை விடுத்து அவரது பதவிக்கும் தொழிலுக்கும் சம்மந்தமில்லாத நடத்தைகளில் ஈடுபட்டுவருகின்றமையை எவரும் பொறுக்க மாட்டார்கள். இதனால் இந்த நாட்டில் இவரை மதகுருவாக பார்க்க முடியாத நிலை இவருக்கு ஏற்படும். இவ்வாறு தான் தோன்றித்தனமாக செயற்படுபவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை வழங்கும்வரை குரல் கொடுப்போம் என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம். என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .