2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சாரணியத்தின் தந்தை அவரின் மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

Kanagaraj   / 2014 பெப்ரவரி 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.பாக்கியநாதன்


சாரணியத்தின் தந்தை பேடன் பவுல் அவரின் மனைவி ஒலே பேடன் பவுல் இருவரின் பிறந்த தினமான பெப்ரவரி 22 ஆம் திகதி  உலக நினைவு தின விழா மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் கொண்டாடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சாரணியர் மற்றும் சாரணிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மெழுகுதிரி ஏந்தி சாரணியத்தின் சத்திய பிரமாண நிகழ்வு மீள் நினைவு கூரப்பட்டது.

எல்லா மாணவ மாணவிகளுக்கும் கல்விக்கான கதவுகள் திறந்துள்ளன எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சாரணியத்ததன் ஆணையாளர் ஐ. அருளம்பலத்தின் தலைமையில் இவ்விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் சமூக சுகாதார உத்தியோகத்தரும் சாரணியத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளருமான வி. பிரதீபனுக்கு நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கபட்டார்.

ஊறணி சரஸ்வதி வித்தியாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் விசேட தேவையுடைய பாடசாலையில் கல்வி கற்கும் ஓசாணம் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

பாடசாலையின் அதிபர் ஆர். கனகசிங்கம், கிழக்கு மாகாண பெண்கள் சாரணிய ஆணையாளர் டி. மோகனகுமார், உதவி ஆணையாளர் எஸ். சாமந்தி மற்றும் பிரதேச ஆணையாளர்கள் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X