2025 மே 03, சனிக்கிழமை

ஆயிரம் பேருக்கு மூக்குக்கண்ணாடிகள்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட 1,000 பேருக்கு மூக்குக்கண்ணாடிகள் ஞாயிற்றுக்கிழமை (23) வழங்கப்பட்டன.

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படுவதை,  ஒவ்வொரு பிரதேச செயலகம் தோறும் சமூக சேவைகள் அமைச்சின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளரும் சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான எஸ்.ஏ.றபீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மூக்குக்கண்ணாடிகளை வழங்கிவைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X