2021 ஜூலை 31, சனிக்கிழமை

முஸ்லிம் பாடசாலையில் இடம்பெற்ற தமிழ் சிங்களப் புத்தாண்டு நிகழ்வுகள்

Super User   / 2014 ஏப்ரல் 22 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருதுக் கோட்டத்தின் லீடர் எம்.எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (22) பலகாரங்ள் மற்றும் இனிப்புப்பண்டங்களை பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர் கே.இலங்கோவினால் புத்தாண்டு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை கல்வி வலயத்தின் ஆரம்பப்பிரிவு ஆசிரிய ஆலோசகர் ஏ.சஹருன் அங்கு உரையாற்றும் போது..

ஒவ்வெரு சமயத்தவர்களின் இவ்வாரான நிகழ்வுகளில் எல்லாச்சமயத்தவர்களும் பங்கு கொள்ளும் போது நல்ல புரிந்துனர்வும் பரஸ்பர நல்லினக்கமும் தாமாகவே உருவாகும்.

எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளை உருவாக்கும் இது போன்ற கல்விக் கூடங்களில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் கட்டாயம் இடம்பெறவேண்டும். அப்போதுதான் எதிர்கால இளம் சந்ததியினர்களிடையே சிறந்த நல்லினக்கப்பாட்டை உருவாக்கலாம் என்பதோடு இன்று உலகம் எதிர்பார்க்கும் நற்பிரஜைகளை உருவாக்க முடியும். என்றார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .