2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வாழைச்சேனையில் வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2014 ஜூலை 29 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள  வீடொன்று  இன்று செவ்வாய்கிழமை (29) காலை  தீக்கிரையாகியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக புதுக்குடியிருப்பு ஸ்ரீபத்திரகாளி அம்மன்  கோவிலுக்கு  இவ்வீட்டிலுள்ளவர்கள் சென்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது வீட்டுச் சுவாமி அறையில் ஏற்றிவைக்கப்பட்ட குத்துவிளக்கு  தவறி விழுந்து  தீ வீடு முழுவதும்  பரவியதாகவும் இந்நிலையில்,  தீயை கட்டுப்படுத்த முடியாது போனதாகவும் வீட்டு உரிமையாளர் ராதிகா அன்புராஜ் வயது (24) தெரிவித்தார்.

இப்பகுதியில் கச்சான் காற்று என அழைக்கப்படும் பருவப்பெயர்ச்சிக் காற்றின்  தாக்கம் அதிகமாக இருந்தமையே தீயை கட்டுப்படுத்த முடியாமல் போனமைக்கான காரணமெனவும் அவர் கூறினார்.

இதன்போது காணி உறுதி ஆவணங்கள்இ பிறப்புப் பதிவுகள் உடைகள்இ தளபாடங்கள்இ  பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

08 மாதங்களுக்கு முன்னர்  இவ்வீடு  நிர்மாணிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X