2025 ஜூலை 09, புதன்கிழமை

வாகனங்கள் மோதி கால்நடைகள் இறப்பு

Suganthini Ratnam   / 2015 மே 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்திலுள்ள மேய்ச்சல்தரையை அண்டிய பிரதான வீதியில் நடமாடுகின்ற கால்நடைகளான கறவைப் பசுக்கள், எருமைகளை அவ்வீதியால் செல்லும் கன ரக வாகனங்கள் மோதிவிட்டுச் செல்வதாக  போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

இந்த நிலையில், வாகனங்கள் மோதி இதுவரையில் நூற்றுக்கும் அதிகமான கறவைப்பசுக்கள் இறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

போரதீவுப்பற்று பிரதேச மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்க அங்கத்தவர்களுக்கான வருடந்த பொதுக்கூட்டம்,  தும்பங்கேணியிலுள்ள கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தில் நேற்று வியாழக்கிழமை (07) நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

திவுலானை பகுதியை அண்டியுள்ள கொழும்பு - கண்டி பிரதான வீதியிலேயே கால்நடைகளை வாகனங்கள் மோதும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.

வியாழக்கிழமையும்  (07) இரண்டு கால்நடைகள் திவுலானைப் பகுதியில் குறித்த வீதியை கடந்துசெல்லும்போது, கனரக வாகனம் மோதிய நிலையில்  இறந்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

கால்நடைகள் நடமாடும் பிரதேசம் என்று  வீதியில் அறிவித்தல் பலகை இடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், அந்த அறிவித்தலை கவனிக்காமல், சாரதிகள் அதிவேகமாக  வாகனங்களை செலுத்துகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் பல வருடங்களாக  இடம்பெற்றுவருவதாகவும் அவர் கூறினார்.

கால்நடை வளர்ப்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல்தரைப் பகுதியில் அத்துமீறிய குடியேற்றங்களும்; தொடர்ந்த வண்ணமுள்ளன. அது மாத்திரமின்றி, இந்த மேய்ச்சல்தரைப் பகுதியில் அத்துமீறி பலர் மேட்டுநிலப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர். இதனால், கால்நடை வளர்ப்பாளர்கள் தங்களின் கால்நடைகளை மேய விடுவதற்குரிய நிலம் பற்றாக்குறையாக உள்ளது.

பால் உற்பத்தியை அதிகரிக்கவேண்டும் என்ற அம்சத்தை அரசாங்கம் முன்வைத்துள்ளது. இருந்தபோதிலும், கால்நடைகளை மேய்த்து பராமரிப்பதற்குரிய இடவசதியை  சம்மந்தப்பட்ட அதிகாரிகள்; பெற்றுத்தராமையும் வேதனை அளிக்கின்றது.  

எனவே, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் கால்நடைகளை  வளர்ப்பதற்குரிய அடிப்படை வசதிகளை இனியாவது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பெற்றுத் தரவேண்டும்.  இல்லையேல்,  தங்களது  கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம்; நடத்தவும் தமது பண்ணையாளர்கள் பின்னிற்கப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .