2025 மே 17, சனிக்கிழமை

நல்லாட்சிக்கான பிரதிபலிப்புகளை காண முடிகிறது: அமீர் அலி

Kogilavani   / 2015 மே 08 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் பெறப்பட்ட இந்த நல்லாட்சியின் பயனாக நாம் நமது பிரதேசங்களிலே அதன் பிரதிபளிப்புக்களை தற்போது காணக்கூடியதாகவுள்ளதாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

சுயதொழிலுக்கான வாழ்வாதாரக் கடன் வழங்கும் திட்டத்தின்கீழ், கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி ஆகிய இரண்டு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

'தற்போது நாட்டடில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் எமக்கு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. கிடைக்கும் கடன் திட்டத்தின் மூலம் கடன்களைப் பெறும் அனைவரும் சமுர்த்தி அதிகாரிகளின் வழிகாட்டலில் முன்னேற்றம் அடைந்து பொருளாதாரத்தில் சிறந்து விழங்க வேண்டும்' எனவும் இதன்போது கேட்டுகொண்டார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக திவிநெகம முகாமைத்தவப் பணிப்பாளர் எஸ்.எ.பஸீர் தலைமையில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், திவிநெகும திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் பி.கணரட்னம், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.நௌபல், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.கே.முஹைதீன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 450 திவிநெகும பயனாளிகளுக்கு நாலு கோடியே முப்பது இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக திவிநெகம முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.எ.பஸீர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .