2025 மே 17, சனிக்கிழமை

புதருக்குள் இருந்து ஆடைமினுக்கியின் சடலம் மீட்பு

Gavitha   / 2015 மே 10 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி சிங்காரத்தோப்பிலுள்ள புதர் ஒன்றிலிருந்து ஆடைகள் மினுக்கும் தொழிலாளி ஒருவரின் சடலத்தை சனிக்கிழமை (09) மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வந்தாறுமூலை பெரியதம்பிரான் கோயில் வீதியைச் சேர்ந்த நடேசபிள்ளை கமலநாதன் (வயது 48) என்பவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று கிராமசேவை உத்தியோகஸ்தர் ஜி.ஏ. விஜயகுமார் தெரிவித்தார்.

ஏறாவூரில் ஆடைமினுக்கி கடை ஒன்றை வைத்து தொழில்புரிந்து வரும் இவர் சனிக்கிழமை (09) வீடு வராததன் பின்னர், குறித் நபரின் உறவினர்கள் அவரை தேடிச்சென்ற போதே புதருக்குள் சடலமாக அவர் கிடந்ததை கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .