2025 மே 17, சனிக்கிழமை

மாகாணத்துக்கு வெளியே கடமையாற்றும் ஆசிரியர்களை சந்திக்க கிழக்கு முதல்வர் அழைப்பு

Thipaan   / 2015 மே 10 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்,கே.எல்.ரி.யுதாஜித்

கிழக்கு மாகாணத்துக்கு வெளியே  நியமனம் வழங்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், செவ்வாய்க்கிழமை (12) தன்னைச் சந்திக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு இன்ற ஞாயிற்றக்கிழமை (10) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போது கிழக்கு மாகாணத்தில் 1850க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளி மாகாணங்களுக்கு அனுப்பியிருக்கும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சுச் செயலாளரின் நடவடிக்கை பரவலான அதிருப்திக்கு உள்ளாகியிருக்கின்றது.

எவ்வாறாயினும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரின் நடவடிக்கையினால் வெளி மாகாணங்களுக்கு அனுப்பப்பட்ட ஆசிரியர்கள் எதிர்வரும் 12.05.2015 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கிழக்கு மாகாண சபைக்கு வந்து என்னைச் சந்தித்து விவரங்களைத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சு செயலாளரின் நடவடிக்கையினால், அநீதி இழைக்கப்பட்ட ஆசிரியர்களின் விவகாரம் முன்னுரிமைப்படுத்தப்பட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .