Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 11 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
இந்த நாட்டில் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும்போது, 20ஆவது திருத்தச் சட்டமூலம் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்தையும்; பாதிக்காதவாறு கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளும் ஒன்றுபட்டு செயற்பட்டு வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச சபையின் புதிய கட்டடத் திறப்பு விழா, திங்கட்கிழமை (11) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கடந்த காலத்தில் பல பாதிப்புகளை எதிர்கொண்ட மக்களுக்கு புதிய வாழ்வை கட்டியெழுப்புகின்ற தலைவர்களாக நாங்கள் இருக்கவேண்டும்.
மேலும், அரசியலுக்காக திட்டமிட்டு நாங்கள் பிரிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். மீண்டும் அவ்வாறான சதித்திட்டங்களில் சிக்காதவாறு தலைவர்கள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்பில் உணர்ந்து கிழக்கு மாகாணசபையில் நாங்கள் விட்டுக்கொடுப்புடன் செயற்படுகின்றோம். இன வேறுபாடுகளுக்கு அப்பால், கிழக்கு மாகாணம் என்ற ரீதியில் நாங்கள் இணைந்து செயற்படும்போது, மக்களுக்கு சிறந்த தீர்வை வழங்கமுடியும்.
தற்போது நல்லாட்சியை உருவாக்கியுள்ளோம். இந்த நாட்டில் யுத்தம் முடிவுக்கு வந்தாலும், தற்போதே சமாதானக்காற்றை நாங்கள் சுவாசிக்கின்றோம்.
இந்த ஆட்சியை மாற்றிய பொறுப்பு ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகத்துக்கு உண்டு. இந்த நிலையில், இதன் பலாபலன்களை பெற்றுக்கொள்வதற்காக விட்டுக்கொடுப்புடனான அரசியலை, ஒரு தீர்வை பெற்றுக்கொள்கின்ற அரசியல் கலாசாரத்தை முன்னெடுக்கவேண்டும்.
நல்லாட்சிக்குள் சிறுபான்மை சமூகத்தின் அபிலாஷைகள் பூர்த்திசெய்யப்படாவிட்டால், அதை நல்லாட்சி என்று கூறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. அரசியல் தீர்வை நோக்கி எங்களது காய்களை நகர்த்தவேண்டும். அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதில் நாங்கள் முன்கொண்டுசெல்லும் நடவடிக்கைகளில்; எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாரில்லை.
இந்த நல்லாட்சியில் சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாகவுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago