2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மத்திய கிழக்கு நாட்டு ஊடகவியலாளர்கள் மட்டக்களப்புக்கு விஜயம்

Princiya Dixci   / 2015 மே 13 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் கடமை புரியும் ஊடகவியலாளர்கள் முதன்முறையாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (12) விஜயம் செய்தனர்.

சவூதி அரேபியா தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் இப்பாஹிம் அல் ஜைத் தலைமையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களே இவ்வாறு மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.

சவூதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளை சோந்த ஊடகவியலாளர்கள் இதில் உள்ளடங்கியிருந்தனர்.

ஆரையம்பதி பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய சிகரம் கிராமத்துக்கு விஜயம் செய்த இவர்கள், அம்மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் மக்களின் கலாசார பாரம்பரியங்களையும் ஒளிப்பதிவு செய்தனர்.

செற்றர்லைட் ஊடாகவும் காட்சிகளை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X