2025 மே 17, சனிக்கிழமை

மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்பூட்டல் கருந்தரங்கு

Thipaan   / 2015 மே 20 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அஹமட் அனாம்

மாணவர்களுக்கூடாக போதைப் பொருள் பாவனையை ஒழிப்போம் என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்பூட்டல் கருந்தரங்கு பிறைத்துறைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்,  வளவாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரி திணைக்கள அத்தியட்சகர் என்.சோதிநாதன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம்.நளீம் ஆகியோர் கலந்து கொண்டு போதை பாவனையால் ஏற்படும் தீங்கு தொடர்பாகவும் சமுதாய சீர்கேடு தொடர்பாகவும் விளக்கமளித்தனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சமுதாய சீர் திருத்த உத்தியோகத்தர் கே.சுதர்சன் கிராம சேவை உத்தியோகத்தர் பி.றம்ளான் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் போதைப் பொருள் பாவனையை இல்லாமல் செய்யும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸின் ஆலோசனையின் பிரகாரம் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூதின் தலைமையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .