2025 ஜூலை 05, சனிக்கிழமை

வயோதிப பெண்கள் மீது கத்தி வெட்டு

Princiya Dixci   / 2015 மே 26 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் திங்கட்கிழமை (25) இரு வயோதிபப் பெண்கள் மீது கத்தியால் வெட்டி, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஐயங்கேனி நாகதம்பிரான் கோவில் வீதியில் வசிக்கும் சித்திரவேல் ராசம்மா (வயது 63), தளவாய்க்கிராத்தில் வசிக்கும் குணசேகரம் சீதேவிப்பிள்ளை (வயது 60) ஆகியோரே இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

விறகு வெட்டச் சென்ற இவர்கள், இரும்புக் கோபுரத்திலிருந்து இரும்புக் கம்பிகளை திருடிக் கொண்டிருந்த சிலரைக் கண்டு கூக்குரல் எழுப்பவே ஆத்திரமடைந்த இரும்புத் திருடர்கள், இந்த வயோதிபப் பெண்கள் மீது கத்தியால் தாக்கியதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கழுத்தில் காயம் ஏற்பட்டதால் இரு பெண்களும் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் செய்யது அலாவுதீன் பர்சான் எனும் சந்தேக நபரை கைது செய்துள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .