2025 மே 17, சனிக்கிழமை

அழகு கலை செயன்முறை பயிற்சி அரங்கு

Sudharshini   / 2015 மே 31 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண பெண்களுக்கான முழுநாள் அழகு கலை செயன்முறை பயிற்சி அரங்கு மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ட்ரீம்ரொன் நிறுவனத்தின் ஏற்பாட்டின் கீழ் அதன் பணிப்பாளர் தீபால் நெல்சன் தலைமையில் இப்பயிற்சி முகாம் நடைபெற்றது. பேராசிரியர் பிரேமசிறி ஹேவாவசம் மற்றும் திருமதி ஹசினி குணசேகர ஆகியோர் பயிற்சிகளை வழங்கினர்.

இப்பயிற்சி முகாமில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்ப்பட்ட அழகு கலை நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுரத் ஹக்மன பண்டார, மட்டக்களப்பு மாவட்ட லயன் கழக தலைவர் என.;பீ.ரஞ்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .