2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஐந்து பேர் கொண்ட விஷேட குழு நியமனம்

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்தல் தொடர்பாகவும் தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பாகவும் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக தேசிய அமைப்பாளர் பா.தவேந்திரராஜா தலைமையில் 5 பேர் கொண்ட விஷேட குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளதாக  கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் வாழைச்சேனை வாசஸ்தலத்தில் திங்கட்கிழமை (29) நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி விஷேட குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல், கிழக்கு மாகாணத் தமிழரின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதாக அமைந்துள்ளது.

மாவட்ட அபிவிருத்திக் குழு தொடக்கம் மாகாண சபை செயலாளர்கள் வரை பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் கிழக்கு மாகாண தமிழர்கள் தீர்க்கதரிசனமாக முடிவுகளை எடுப்பது காலத்தின் தேவையாகும்.

எனவே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மிகத் தீர்க்கமாக தமிழ் மக்களை நில, நிர்வாக, பொருளாதார அபிவிருத்தி ரீதியாக பாதுகாப்பதற்கு பூரணத்துவமாக அர்ப்பணிப்புடன் செயற்படக் கூடிய வேட்பாளர்களை தெரிவு செய்யவுள்ளதுடன் தமிழரின் உரிமை மற்றும் அபிவிருத்தி என்பவற்றை சீராக பேணக்கூடிய அரசியல் தலைமைகளை தேர்தலில் களமிறக்கவும் தீர்மானித்துள்ளது. 

வெளிப்படையான நேர்முக தேர்வுகள் மூலம் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கும் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பிலும்  கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும்; செயற்பாட்டை எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இவ் விஷேட குழு அறிக்கையாக  சமர்ப்பிக்கும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X