Sudharshini / 2015 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
'எனது இறுதி மூச்சு இருக்கும்வரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் இணைந்திருந்து தலைவர் ஹக்கீமின் கரங்களைப் பலப்படுத்துவேன்' என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஏறாவூர் மௌலானா சதுக்கத்தில் நேற்று (31) இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து பேசிய அவர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் எந்தளவுக்கு என்னையும் எனது ஊரையும் நம்பி, அவரது கட்சியில் என்னை இணைத்துக் கொண்டு இந்த மாவட்டத்தின் தலைமை வேட்பாளர் என்ற பொறுப்பைக் கொடுத்தாரோ, அந்தப் பொறுப்பை மிகக் கண்ணியமாக நிறைவேற்றுதற்கு நான் என்றென்றும் பாடுபடுவேன்.
அண்மைக்காலமாக தேசிய ரீதியாக முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற சவால்களையும் அரசியல் காய் நகர்த்தல்களையும் சூழ்ச்சிகளையும் முறியடிப்பதுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் என்னை இணைத்துக் கொண்டிருப்பதை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டு, எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு விசுவாசமாக இருப்பேன்.
கடந்த காலங்களில் இந்த நாட்டுக்காகவும் ஒட்டு மொத்த மக்களுக்காகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்காகவும் அநேக தியாகங்களை நான் செய்திருக்கின்றேன் என்பதை இந்த நாடு நன்கு அறியும்.அதே பாணியில் எனது பணி தொடரும் என்பதை இவ்விடத்தில் நான் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துகின்றேன். ஊழல், இனபேதம், பிரதேசவாதமற்ற முறையில் எனது சேவை தொடரும்.
பொதுத் தேர்தலின் பின்னர் அமையவிருக்கின்ற நல்லாட்சிக்கும் இன ஐக்கியத்திற்கும், இனப்பாகுபாடற்ற அத்தனை அபிவிருத்திக்கும் என்னாலான பங்களிப்புக்களைச் செய்வதற்கு நான் என்றும் சித்தமாக இருக்கின்றேன்' என்றார்.
22 minute ago
34 minute ago
44 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
34 minute ago
44 minute ago
5 hours ago