Janu / 2023 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் பிரதேசத்தில் 4 வீடுகளை உடைத்து பணம் , தங்க ஆபரணங்கள் , கையடக்க தொலைபேசிகளை திருடிவந்த இரண்டு பேரை செவ்வாய்க்கிழமை (8) கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் அண்மையில் இரவு பூட்டியிருந்த வீடு ஒன்றையும் மற்றும் 3 வீடுகளிளும் கதவை உடைத்து உள்நுழைந்து அங்கிருந்து தங்க ஆபரணங்கள் கையடக்க தொலைபேசிகள் பணம் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பாக மேற்கொண்டுவந்த விசாரணையின் போது புதன்கிழமை (08) நாவக்கேணி பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்த 30 வயது மற்றும் 32 வயதுடைய இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க ஆபரணங்கள், கையடக்க தொலேபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 21 ம் திகதிவரை நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கனகராசா சரவணன்

27 minute ago
32 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
57 minute ago