2026 மே 04, திங்கட்கிழமை

7 நாட்களும் மீனவர்கள் கடலுக்கு செல்லலாம்: ஜோர்ஜ்

Super User   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வாரத்தில் எல்லா நாட்களும் மீனவர்கள் கடற் தொழிலில் ஈடுபட அனுமதியுண்டு என மட்டக்களப்பு மாவட்ட கடற் தொழில் உதவி பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

மதக் காரணங்களை முன்னிறுத்தி கடற் தொழிலுக்கு தடை ஏற்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏறாவூர் புன்னைக்குடாக் கடலில் வெள்ளிக்கிழமையில் மீன் பிடிப்பதற்கு சில தரப்பினர் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை மீறி கடலுக்கு செல்வோர் மீன் விற்பனை செய்யக் கூடாது எனவும் தடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட கடற் தொழில் உதவி பணிப்பாளரிடம் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

'பயங்கரவாத செயற்பாடுகள் எதுவும் கடற்பரப்பில் தற்போது இல்லாத காரணத்தினால் கடற்றொழிலாளர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ எந்தத் தடையுமின்றியும் பாஸ் அனுதியுமின்றியும் சுதந்திரமாக கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபட முடியும்' என அவர் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் மதக் காரணங்களை முன்னிறுத்தி யாரும் தனியாகவோ அல்லது அமைப்பு ரீதியாகவோ கட்டளை பிறப்பிக்க முடியாது. அவ்வாறு நடந்தால் அது மனித உரிமை மீறலாகக் கொள்ளப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து ஏறாவூர் உதவிப் பொலிஸ்அத்தியட்சகருக்கும் அறிவித்துள்ளேன் என்றும் ஜோர்ஜ் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .