2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

8,874 மதுபான போத்தல்களுடன் லொறி கைப்பற்றல்

Menaka Mookandi   / 2012 ஜூலை 26 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.லோஹித்)

கொழும்பில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒருலொறி மதுபான போத்தல்களை மதுவரித்திணைக்கள அதிகாரிகள் நேற்று கைப்பற்றியுள்ளனர்.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு ஊடாக இப்போத்தல்கள் கடத்தப்பட்டுள்ளதாக மட்;டக்களப்பு - அம்பாறை மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் துசாதரன் தெரிவித்தார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் அம்பாறை மதுவரித் திணைக்கள பரிசோதகர்களான ஜானக டயஸ், உதயகுமார, லயனல் குணதிலக, துடுகல, தம்மிககுமார ஆகியோர் கொண்ட குழுவினரே குறித்த லொறியை கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த லொறியில் இருந்து 8874 மதுப்போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் போத்தல் மாதிரிகள் அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களை கொண்ட லொறி அம்பாறையில் உள்ளமதுவரித்திணைக்களத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் துசாதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் சந்தேகத்தின்பேரில் லொறிச்சாரதியும் லொறியில் இருந்த ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை நீதிமன்றில் நிறுத்துவதற்கான வேலைகள் இடம்பெற்று வருவதாகம் மதுவரித்திணைக்கள அத்தியட்சர் துசாதரன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .