Kogilavani / 2017 மே 23 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரநாயக்க, கப்பாகொட பிரதேசத்தில், மசாஜ் விடுதி என்ற பெயரில் விபசார விடுதியை நடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில், 41,35 வயதுடைய பெண்கள் இருவர் உட்பட நால்வரை, ஞாயிற்றுக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையத்தின் உரிமையாளரும் ஆயுர்வேத வைத்தியருமான பெண்ணொருவர் உட்பட நால்வரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், ஹாலிஎல மற்றும் திரப்பனே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களென, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதானவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
10 minute ago
11 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 Jan 2026