Super User / 2010 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
( எஸ்.சுவர்ணஸ்ரீ )
உருளைக்கிழங்குக்கான இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சந்தையில் உருளைக்கிழங்கின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு வகைகள் தற்போது சந்தையில் 80 ரூபா முதல் 85 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றன.
நுவரெலியா மற்றும் வெலிமடையில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒரு கிலோ உருளைக்கிழங்கு 90 ரூபா முதல் 95 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.
இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்குக்கு இறக்குமதி தீர்வை அதிகரிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் நன்மையடைந்துள்ளனர். ஆனால் 50 ரூபாவுக்கு கொள்வனவு செய்த ஒரு கிலோ உருளைக்கிழங்கு தற்போது 80 ரூபா முதல் 85 ரூபா வரை விலைக்கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
20 minute ago
38 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
49 minute ago