2021 ஜூன் 24, வியாழக்கிழமை

நுவரெலியாவில் உள்ளூராட்சி உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம்

Kogilavani   / 2011 மார்ச் 30 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற மலையக மக்கள் முன்னணி – தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண வைபவம் நாளை மறுதினம் முதலாம் திகதி நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் காலை 9 மணிக்கு இடம் பெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவி திருமதி சாந்தினிதேவி சந்திரசேகரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம்,  மலையக மக்கள் முன்னணியின் அரசியற்பிரிவு தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில்  பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரிகொப்பேகடுவ கலந்து கொள்ளவுள்ளார்.

இதன்போது நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்கள் முன்னணி – தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய அமைப்புக்கள் கூட்டமைத்துப் போட்டியிட்டதன் மூலம் வெற்றிபெற்ற 18 உறுப்பினர்களும் கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் மலையக மக்கள் முன்னணி தனித்துப்போட்டியிட்டதன் மூலம் வெற்றிபெற்ற 9 உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்யவுளள்னர்
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .