Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 ஜனவரி 31 , மு.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் பொதுத்தேர்தலில் எமது மக்கள், சிந்தித்து வாக்களிக்க வேண்டும். எமது தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்கள் ஏனைய மலையக மக்களிடம் வாக்கின் புனிதத்தை உணர செய்து உண்மையான மலையக தலைவர்களை தெரிவு செய்ய தூண்டுவதோடு இந்த மக்களின் ஆட்சியை நிலைக்க வைக்க இப்போதிருந்தே நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
திம்புள்ள - பத்தனை சனசமூக நிலையத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத்தலைவர்மார்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
தொழிற்சங்க பலத்தினால் அரசியலுக்குள் பிரவேசித்த தொழிலாளர் தேசிய சங்கம், இன்று ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து மலையக தமிழ் மக்களுடைய வாக்குப்பலத்தினால் நாட்டில் நல்லதொரு ஆட்சி மாற்றத்துக்கும் வித்திட்டுள்ளது
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொழிலாளர் தேசிய சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை ஒன்றிணைந்து மலையகத்திலும் நாட்டிலும் அராஜகத்தை ஒழித்து, ஜனநாயக அரசியலை ஏற்படுத்துவதில் முனைப்புடன் செயற்பட்டன.
இதன் காரணமாக மலையக மக்களுக்கு நேரடியாக சேவை செய்யக்கூடிய தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, கல்வி இராஜாங்க அமைச்சு மற்றும் பெருத்தோட்டத்துறை பிரதி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் ஒன்றுசேர்ந்து கிடைத்திருப்பதானது எமது தலைவர்களையும் மலையக மக்களையும் கௌரவப்படுத்துவதாக அமைந்துள்ளது. இத்தகைய அமைச்சுக்களையும் எமது சிறந்த தலைவர்களையும் தக்க வைத்துக்கொள்வது இனிவரும் காலங்களில் எமது மக்களின் மாண்புமிகு கடப்பாடாகும்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக தலைவர் திகாம்பரம், எமது மலையக தோட்டத்தொழிலாளர்களுக்கு உரித்தான காணி மற்றும் வீட்டுரிமையை பெற்றுக்கொடுப்பதுக்கான முதற்கட்ட நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றார்.
அதேபோல, மீரியாபெத்தயில் எமது சொந்தங்களுக்கு தனிவீடு அமைப்பதிலும் முனைப்புக் காட்டி வருகின்றார். இதற்கு மலையத்தின் மீது பற்றுள்ள ஏனைய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புக் கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும்.
இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நாட்டு மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அரச உத்தியோகத்தர்களின் சம்பள உயர்வில் எமது மலையக தோட்டப்புற அரசாங்க உத்தியோகத்தர்களும் நன்மையடைந்துள்ளதோடு இதனால், இவர்களில் தங்கிவாழ்ந்த தோட்டத்தொழிலாளர்களும் நன்மையடைந்துள்ளனர்.
இதேபோல, எதிர் காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளிலும் மலையக தலைவர்கள் அரசாங்கத்துக்;கு உரிய அழுத்தங்களையும் ஆலோசனைகளையும் கொடுத்து வருகின்றனர்.
இக்கலந்துரையாடலில், பிரதேச சபை உறுப்பினர்களான ஜீ.நகுலேஸ்வரன், காளிதாஸ், பிரதேச அமைப்பாளர்களான ஜெயராம், லெச்சுமணன், விஜயவீரன் மற்றும் தோட்டத்தலைவர்களோடு கட்சி முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
34 minute ago
44 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
44 minute ago
52 minute ago
1 hours ago