2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

அக்கரபத்தனையின் பாதீடும் நிறைவேற்றம்

ஆ.ரமேஸ்   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரபத்தனை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீடு, சபை உறுப்பினர்களின் எதிர்ப்புகள் இன்றி, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

15 உறுப்பினர்களைக் கொண்ட அக்கரபத்தனை பிரதேச சபையின் 2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டை, சபைத் தவிசாளர் எஸ்.கதிர்செல்வன் சமர்ப்பித்திருந்திருந்தார்.

சபை அமர்வில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்கள் 8 பேரும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணியைச்  7 பேரில் 6 பேரும், கலந்துகொண்டிருந்தனர். மலையக மக்கள் முன்னணி சார்பான பெண் உறுப்பினர், சபை அமர்வுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.

இதன்போதே, வாக்கெடுப்பின் போது, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஐந்து நிமிட கலந்துரையாடலுக்குப் பின்னர், எந்தவொரு எதிர்ப்பும் இன்றி, பாதீடு நிறைவேற்றப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .