R.Maheshwary / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
நாவலப்பிட்டி நகர மத்தியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி கட்டடத்துக்கு முன்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (18) மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தார்.
சுமார் 60 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலம் காணப்படுவதாக, நாவலப்பிட்டி நகரசபை பணியாளர்களால் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த திடீர் மரண விசாரணை அதிகாரியான மல்லிகா ஹேவாவிதாரண, இறந்தவர் தொடர்பாக பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொள்வதற்காக, சடலத்தை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன், நாவலப்பிட்டி நகர சபை பணியாளர்களால் குறித்த வர்த்தக நிலையக் கட்டடம் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago