Sudharshini / 2016 பெப்ரவரி 03 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி
மாத்தளை, உடதென்ன, பகனாராம வித்தியால அதிபரை மாற்றி புதிய அதிபரை நியமிக்குமாறு கோரி வலயக் கல்வி காரியாலத்தின் நுழைவாயில் முன்னால், பெற்றோர்கள் நடத்திய போராட்டத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (03) பாடசாலை மாணவர்களும் இணைந்தனர்.
பாடசாலையின் ஒழுக்கம் மற்றும்; கல்வி நடவடிக்கை வீழ்ச்சியடைந்தமைக்குத் தகுந்த காரணத்தை அதிபர் தெரிவிக்குமாறு, அதிபருக்கு எதிராக மாத்தளை வலயக் கல்வி காரியாலயத்துக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
ஆனால், அதற்கான தீர்வு கிடைக்காமையினால் கடந்த செவ்வாய்க்கிழமை (02) பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் முறையான தீர்வு கிடைக்காவிடின், நாளையதினம் பாடசாலை மாணவர்களையும் போராட்டத்தில் இணைத்துக்கொள்வோம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களும் இணைந்திருந்தனர்.
இன்னும் 14 நாட்களில் இது தொடர்பில் விசாரணை நடத்தி, இதற்கான தீர்வினைப் பெற்று தருவதாக ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாத்தளை வலயக்கல்விப் பணிப்பாளர் மஹிந்த யாப்பா தெரிவித்தார்.


24 minute ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
13 Apr 2026