Editorial / 2019 டிசெம்பர் 24 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீலமேகம் பிரசாந்த்
2020ஆம் ஆண்டு, அபிவிருத்திக்கான ஆண்டாக அமையும் என, அக்கரபத்தனை பிரதேச சபைத் தவிசாளர் கதிர்செல்வன் தெரிவித்தார்.
அக்கரபத்தனை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு, நேற்று (23), சபைத் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அக்கரபத்தனை பிரதேச சபை உருவாக்கப்பட்டு 19 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த காலங்களில், பிரதேச சபையூடாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது என்றும் கடந்த அரசாங்கத்தால், குறைந்தளவான நிதிகள் வழங்கப்பட்டதோடு, சபைக்கும் குறைந்தளவான வருமானமே கிடைக்கப்பெற்றது என்றும் கூறினார்.
எவ்வாறாயினும், கடந்த காலங்களில், மக்களின் தேவைகளை அறிந்து, பல்வேறு அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்ததாகவும் இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், சாதாகமான வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago