2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புசல்லாவை  சரஸ்வதி மத்திய கல்லூரியை 95 மில்லின் ரூபாய் நிதியில் அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் எதிர்காலத்தில் மலையகத்தின் 50 பாடசாலைகள் 1,000 மில்லியன் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை தொடர்பாக நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி இராதா வெங்கட்ராமனுக்கும் இராஜாங்க கல்வி அமைச்சர்
வே.இராதாகிருஷ்ணனுக்குமிடையிலான கலந்துரையாடலின்போதே மேற்படி விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டன.

இதன்போது, மலையக பாடசாலைகளுக்கு  இந்திய உதவி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் ஊடாக உதவிகள் கிடைக்கும்போது,  அதற்கு கல்வி அமைச்சின் அனுமதி பெறவேண்டிய கட்டாயம் தொடர்பாக வலியுறுத்தப்பட்டது.

எதிர்காலத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் கல்வி ரீதியிலான நடவடிக்கைகள் யாவும் கல்வி அமைச்சின் ஊடாகவே நடைமுறைப்படுத்தப்படும். கல்வி அமைச்சு சிபாரிசு செய்யும் வேலைத்திட்டங்கள் மட்டுமே பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்' என இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .