Editorial / 2020 ஜூலை 06 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
ஏறாவூரிலிருந்து நுவரெலியா வழியாக பொகவந்தலாவ பகுதிக்கு, அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி, இன்று (06) விபத்துக்குள்ளானதில், சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில், ரதெல்ல குறுக்கு பாதையில் வைத்தே, குறித்த லொறி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவித்த நானு-ஓயா பொலிஸார், லொறியிலிருந்த 400 அரிசி மூடைகளை, பிரதேச மக்களின் உதவியுடன், மற்றொரு லொறியில் ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தனர்.


4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago