Sudharshini / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவாணி ஸ்ரீ
இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இந்து, பௌத்த, முஸ்லிம் மத வழிபாட்டுத்தளங்களில் அறநெறி கல்வியை ஊக்குவிக்க சப்ரகமுவ மாகாண சபையின் ஊடாக விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக இரத்தினபுரி 'முந்துவ பிரிவென' அறநெறி பாடசாலைக்கு புதிய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை (01) நடைபெற்றது.
இதற்காக, சப்ரகமுவ மாகாண சபையின் ஊடாக 220 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிகழ்வில் மத குருமார்கள், சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், சப்ரகமுவ மாகாண அமைச்சர் ரஞ்ஜித் பண்டார, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களான ஹெய்யா எம்.இப்ளார், அசோக ஜயவர்தன, பிரபாத் மஹேஷ் த அல்விஸ், சமித்த ஆட்டிகல, அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
6 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
13 Apr 2026