Kogilavani / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
அறநெறிக் கல்வியை மாணவர்கள் உள்வாங்க வேண்டும் என்ற நோக்கிலேயே, ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்த வேண்டாமென அறிவுறுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.,ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
'பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு, அறநெறிக் கல்வி மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக அறநெறி பாடசாலைகளுக்குச் செல்ல தமது பிள்ளைகளை பெற்றோர் வலியுறுத்த வேண்டும். ,தன் மூலமாக ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும்' என்றும் கூறினார்.
நுவரெலியா, ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய, சீத்தாஎலிய சீதையம்மன் ஆலய நிர்வாகசபையின் 46ஆவது பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் அண்மையில் நடைபெற்றது.
நிர்வாக சபையின் தலைவராக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி ,ராதாகிருஷ்;ணன், 26ஆவது முறையாக பொதுமக்களால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.
தலைவராக தெரிவு செய்யப்பட்டபின்பு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'ஆலயங்கள் சிறப்பாக நிர்வகிக்கப்படுமானால் நிச்சயமாக மக்களை நல்வழிப்படுத்த அது சிறந்த ஒரு முறையாக அமையும். அதேபோல அனைத்து ஆலயங்களிலும் அறநெறி பாடசாலைகளை நடத்த நிர்வாகங்கள் முன்வரவேண்டும். அதனை நாங்கள் கல்வி அமைச்சின் மூலமும் ஊக்குவித்து வருகின்றோம்' என்றார்.
'கல்வி அமைச்சு அறநெறி கல்விக்கு ,ன்று அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. சிறுவர்கள் சிறுவயது முதலே அறநெறிக்கு செல்வதன் மூலம் அவர்கள் அந்த போதனைகளையும் அங்கு கற்பிக்கப்படும் நல்லொழுக்கம், சமய வழிபாடு போன்றவற்றை உள்வாங்கி நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக முடியும் என்பதற்காகவே இதற்கு முக்கியத்துவமளிக்கப் படுகின்றது' என்றார்.
அறநெறி கல்வியை முறையாகக் கற்ற மாணவர்கள் பிழையான வழியில் செல்ல மாட்டார்கள். தமது பெற்றோரை வெறுக்கமாட்டார்கள். அயலவர்களுடன் நல்ல உறவை பேணுவார்கள். நல்ல நண்பர்களை தேடிக்கொள்வார்கள். எனவே, அறநெறி கல்வியைக் கற்க மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026